லண்டனில் அனாதையாக கிடந்த பல மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்!
லண்டன் வாகனத்தில் அனாதையாக கிடந்த பல மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பணத்தை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட பணம் பற்றிய தகவல்களை குறித்து பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று லண்டனில் கருப்பு நிற வாகனம் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வாகனத்தின் பயணிகள் இருக்கையில் ஒரு பெரிய பெட்டி காணப்பட்டது. அந்த பெட்டி முழுவதும் பணம் மூலம் நிரப்பப்பட்டிருந்தது.
2002ம் ஆண்டு நடைமுறை குற்றச்சட்டத்தின் கீழ், 73 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பறிமுதல் செய்யப்பட்டது என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்து அதிக அளவில் கைப்பற்றப்பட்ட பணம் இது என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்