எனது பல நாள் ஆசை நிறைவேறியுள்ளது..! கமல்ஹாசன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்க இடத்தில் நடைபெற்றது. லயோலா கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே பொதுக்குழு நடத்த அனுமதித்த நிலையில் பின்னர் வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு கூறி அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில் பொதுக்குழுவிற்கு வராமல் ஸ்கைப்பில் கூட்டத்தினரிடையே மூத்த உறுப்பினர் கமல்ஹாசன் பேசினார். அவர் தனது உரையில் , ” நடிகர் சங்கத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது சொந்த இடத்திலேயே நடைபெற வேண்டும் என்பது எனது பல நாள் ஆசை. அந்த ஆசை பல நாட்களுக்கு பிறகு நிறைவேறியுள்ளது.
நடிகர் சங்கத்தின் இளம் உறுப்பினர்கள், என்னைவிட இளையவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள், தோழமையும், பொறுப்பும் இருக்கிறது என்பதை நான் உணர்வேன். மறைந்த கலைஞர்களுக்கும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் பங்கு உள்ளது.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்