வருங்கால மனைவிக்காக, புகைத்தலை விட்ட பிரித்தானிய இளவரசர் ஹரி!
தனது வருங்கால மனைவிக்காக பிரித்தானிய இளவரசர் ஹரி தனது புகைத்தல் பழக்கத்தை கைவிட்டுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹரி பள்ளிக்கூடம் படிக்கும் போதே புகைத்தல் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். பின்னர் அவர் இராணுவத்தில் இருந்தபோதும் புகைத்தல் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். ஹரி புகைப்பிடிப்பது அவரது தந்தை சார்லஸ் விரும்பவில்லை என்றாலும் அவர் புகைத்தலை நிறுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளார்.
இந் நிலையில் ஹரி தனது வருங்கால மனைவி மேர்கன் மெர்க்கலின் வேண்டுகோளிற்கு இணங்க உடல் நலத்தை கருத்தில்கொண்டு புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஹரி சில சமயங்களில் நாள் ஒன்றுக்கு 20 சிகரெட்களை புகைப்பார் எனவும் சில நிகழ்ச்சிகளின் போது பொது இடங்களில் வைத்து புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்