37 ஆண்டுகளுக்குப் பின்னரும், செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் விண்கலம் - நாசா தகவல்..
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வௌி நிறுவனம் 1977 ம் ஆண்டு வொயேஜர் 1 என்ற விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது. இந்த விண்கலம் சனி கிரகத்துக்கு அருகில் செல்ல விண்கலத்தின் உடன் அனுப்பப்பட்ட உந்து விசைக்கான எந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர் உந்து விசைக்கான எந்திரத்தை பயன்படுத்தும் பயன்படுத்தும் அவசியம் நாசாவுக்கு ஏற்படவில்லை.
இந்தநிலையில் தற்போது இது குறித்து சோதனை செய்வதற்காக நாசா சமிஞ்சை ஒன்றை அனுப்பியது. சமிஞ்சை அனுப்பி 19 மணிநேரத்துக்குப் பின்னர் இந்த சமிஞ்சைகள் விண்கலத்தை சென்றடைந்தன. ஆய்வின் முடிவில் உந்து விசை எந்திரம் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த உந்து விசைக்கான எந்திரம் ஏவப்பட்டு 37 ஆண்டுகளுக்குப் பின்னரும் வெற்றிகரமாக செயல்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்