Header Ads

எவனும் புத்தனில்லை... ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி நடிகையுடன் கெட்ட ஆட்டம் போட்ட சினேகன்!.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் சினேகன் சினிமாவில் பிஸியாகிவிட்டார். எவனும் புத்தனில்லை படத்தில் ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி நடிகையுடன் ஆட்டம் போட்டுள்ளார்.
வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள்.
ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேல ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம் கார்த்திகேயன், எம்எஸ் பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மரியா மனோகர்
சினேகனே எழுதிய பாட்டு

ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகன் நடிக்கிறார். இப்படத்துக்காக மரியாமனோகர் இசையில் அவர் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். அந்தப் பாடலுக்குதான் பூனம் கவுருடன் ஆட்டம் போட்டுள்ளாராம் சினேகன்.
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் எஸ் விஜயசேகரன்.

சுயநலத்துக்கு எதிராக
மாணவனின் யுத்தம்
இந்த படம் குறித்து இயக்குநர் எஸ் விஜயசேகரன் கூறியதாவது, 'உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி உயர மலை கிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே எவனும் புத்தனில்லை.

மலேசியாவில் ஆட்டம்
சினேகன்
சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. அவருடன் பூனம் கவுர் ஆடினார்.

200 கலைஞர்களுடன்
எதுவும் தப்பில்லை

'எதுவும் தப்பில்லை
எவனும் புத்தனில்லை...' என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது,' என்றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.